search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டு வீச்சு"

    கேரளாவில் போலீஸ் நிலையம் மீது குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம் பெண்கள் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி கேரளாவை சேர்ந்த கனகதுர்க்கா (வயது 44), பிந்து (42) ஆகிய 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் சபரிமலை கர்மசமிதி அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தது.

    திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு போலீஸ் நிலையம் மீதும் ஒரு கும்பல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டது. இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் துப்புதுலக்கியபோது போலீஸ் நிலையம் மீது குண்டு வீசிய 10 பேர் கும்பல் அடையாளம் காணப்பட்டது. அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த வழக்கில் ஏற்கனவே 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பிரவீன், ஸ்ரீஜித், அபிஜித் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருவனந்தபுரம் தம்பானூர் ரெயில்நிலையத்தில் வைத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஸ்ரீஜித், அபிஜித் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களை நெடுமங்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காசாமுனையில் ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து நேற்று இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது. இதில் ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலியாகினர்.
    காசா:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

    பாலஸ்தீனைப் பொறுத்தவ ரயில், அங்கு ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன மக்களிடையே செல்வாக்கு பெற்று உள்ளது.

    பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலை மீட்டுக்கொடுத்து, மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதே ஹமாஸ் இயக்கத்தினர் நோக்கம் ஆகும்.ஹமாஸ் இயக்கத்தினரை இஸ்ரேல் பயங்கரவாதிகள் என கூறுகிறது.

    இந்த நிலையில், காசாமுனையில் ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து நேற்று இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது. இதில் ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலியாகினர். இஸ்ரேல் ராணுவத்தினரை குறிவைத்து ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடுக்கு பழிவாங்கும் விதமாக இந்த குண்டுவீச்சை நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது. 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் பகுதி வழியாக ரோந்து சென்ற பாதுகாப்பு படை வாகனங்களின் மீது சில மர்ம நபர்கள் இன்று கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் பகுதி வழியாக இன்று மாலை வழக்கம்போல் மத்திய துணை ராணுவப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் சென்ற பாதுகாப்பு படை வாகனங்களின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் வேட்டையில் அதிகாரிகளும், வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். #SrinagarCRPFparty
    வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகரில் பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் மண்எண்ணை குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகர் ஸ்ரீலட்சுமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர். விருகம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந் தேதி இரவு சுந்தர், குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் சுந்தர் வீட்டின் மீது 2 மண்எண்ணை குண்டுகளை வீசி தப்பி சென்றுவிட்டனர்.

    வீட்டின் முன்பகுதி மற்றும் ஜன்னல் மீது விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சுந்தர், குடும்பத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமி‌ஷனர் ஞானசுந்தர், இன்ஸ்பெக்டர் அழகு ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் மண்எண்ணை குண்டுகளை வீசியது விருகம்பாக்கம், மேட்டுக்குப்பத்தை சேர்ந்த தக்காளி பிரபா மற்றும் கூட்டாளிகள் என்பது தெரிந்தது.

    இதையடுத்து மேட்டுக்குப்பத்தை சேர்ந்த வெள்ளை மணி என்கிற வினோத், கார்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    முக்கிய குற்றவாளியான தக்காளி பிரபா, கூட்டாளிகள் சரவணன், புறா முத்து, பார்த்திபன் ஆகிய 4 பேரை தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த அன்று காலை பெட்ரோல் பங்க்கில் உள்ள அலுவலகத்தில் தக்காளி பிரபா கோஷ்டியினர் செல்போன் திருடி உள்ளனர்.

    இது தொடர்பாக சுந்தர் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இந்த கோபத்தில் அவரது வீட்டில் மண்எண்ணை குண்டுகளை தக்காளி பிரபா கோஷ்டியினர் வீசி இருப்பது தெரிந்தது. #Tamilnews
    ×